Family · Tamil

ஆடைகளுக்கும் அலங்காரங்களுக்கும் பாலின வேறுபாடு ஏன்?

Completed | Part 1 of 1 | 0 Likes

ஆடைகளையும், அலங்காரங்களையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாகப் பிரித்து வைத்தது யார்? இந்த உடையை ஆண்கள்தான் அணிய வேண்டும், இதைப் பெண்கள்தான் அணிய வேண்டும் என்று வகுத்தது யார்?

ஒரு பெண் புடவை கட்டியிருந்தால் அழகானவள், மகாலட்சுமி, மதிக்கத்தகுந்தவள் என்று போற்றும் சமூகம், அதே பெண் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற உடைகளை அணியும்போது அவளை மாடர்ன் கேர்ள், இண்டிபெண்டெண்ட், மன உறுதி கொண்டவள் என்றும் போற்றுகிறது. ஆனால், அதே ஒரு ஆண் புடவை கட்டிக்கொண்டு, நீளமான கூந்தல் வைத்துக்கொண்டு, தன்னை அலங்கரித்துக்கொண்டால், அவனைப் பார்க்கும் கண்ணோட்டம் மட்டும் ஏன் மாறுகிறது?

ஒரு பெண் புடவை, சுடிதார், கவுன் போன்ற உடைகள் மட்டுமல்லாமல், ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற உடைகளையும் அணியும்போதுகூட அவளைப் பெண்ணாகவே கருதும் சமூகம், ஒரு ஆண் புடவை, சுடிதார் போன்ற உடைகளை அணியும்போது மட்டும் அவன் ஆண்மைத்தன்மை அற்றவன் என்றும், அவனுடைய உடலில் ஏதோ ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் ஏன் கருதுகிறது? ஏன் அவனை ஏளனமாகப் பார்க்க வேண்டும்?

இதில் வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இத்தகைய செயல்களைச் செய்பவர்களில் பலர் பெண்களாகவே இருக்கிறார்கள். அதுவும், ஜீன்ஸ், டி-ஷர்ட் என அணியும் மாடர்ன் பெண்களும்தான்!

நகை, சிகை, உடை, கூந்தல் என அனைத்து அலங்காரங்களும் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்று யாரேனும் ஒப்பந்தம் செய்துள்ளார்களா? அல்லது அவை அனைத்தையும் ஆண்கள் செய்துகொண்டால் ஏதேனும் கேடு நிகழுமா? அல்லது அந்த அலங்காரங்கள் அனைத்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதா?

நான் அதிகமாகக் கேள்விப்பட்டதில், சில பெண்களின் கருத்து இதுதான்: "ஆண்களைப் போல உடை அணிவது, பாவனை செய்வது எல்லாம் கெத்து, மாஸ்!" என்று சிலர் பெருமையாக என் முன்பே பேசியிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் புடவை அணிவது, கூந்தலை அலங்காரம் செய்வது, தன்னை அழகுபடுத்திக்கொள்வது போன்ற செயல்களைச் செய்தால் மட்டும் அவனை ஏளனமாகவும் இழிவாகவும் பார்ப்பது ஏன்?

நம்முடைய புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஆண்கள் நகை, சிகை, கூந்தல், ஆடை போன்றவற்றால் தங்களை அலங்கரித்துக்கொண்டது இல்லையா?

இதற்கு ஒரு இதிகாச உதாரணமாக மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனையே எடுத்துக்கொள்ளலாம். அஞ்ஞாதவாசத்தின்போது அர்ஜுனன் 'பிருஹன்னளை' என்ற பெயரில் பெண் வேடம் பூண்டு, நீண்ட கூந்தல் மற்றும் பெண்களுக்குரிய அலங்காரங்களுடன் வாழ்ந்ததாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. அதேபோல், நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் ஆண் தெய்வங்கள் நகைகள், மலர்கள், ஆடை அலங்காரங்கள் அணிந்திருப்பதையும் பார்க்கிறோம். அப்படியிருக்கும்போது, அலங்காரங்களுக்கு ஏன் இத்தனை பாலின வேறுபாடுகள்?

பெண்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் என அணிவதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளும்போது, ஆண்கள் புடவை, சுடிதார் அணிவதைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்கள்?

பெண்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணியும்போது அவர்களுக்கு வரும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பெரிதாக நினைக்கும் சில பெண்கள், அவர்களை இண்டிபெண்டெண்ட் ஆகவும் நினைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, ஆண்கள் புடவை கட்டும்போதும், தங்களை அலங்கரித்துக்கொள்ளும்போதும் மட்டும் ஏன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?

தைரியம், தன்னம்பிக்கை, இண்டிபெண்டெண்ட் ஆகிய அனைத்தும் உடைகளில்தான் உள்ளனவா? அல்லது மனதில் உள்ளனவா? அப்படியானால், இங்கு வலிமை அற்றவர்கள் ஆண்களா, இல்லை பெண்களா? இழிவாகப் பார்க்கப்படுவது ஆண்களா அல்லது பெண்களா?

ஒரு பெண்ணே தான் ஒரு பெண் என்பதில் பெருமை கொள்ளாதபோது, மற்றவர்களைக் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்? நான் அனைத்து பெண்களையும் பற்றிப் பேசவில்லை. முதலில், ஒரு பெண் தான் ஒரு பெண் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இயற்கையின் படைப்புகள் என்பதை முதலில் உணர வேண்டும். ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான வேலை, காரணம், காரியம், பொறுப்புகள் என அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால், மற்ற உயிரினங்களைப் போல் இல்லாமல், மனிதர்கள் மட்டும் "நீ, நான், யார் சிறந்தவர்கள்?" என்ற போட்டியிலேயே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நான் கூறுவது ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

**நன்றி!**

Congratulations!

You've successfully completed reading all published parts of this story!

71 Views 0 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (0)

No comments shared yet. Be the first to share your thoughts!
Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login